அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராய இன்று வடக்கு வருகின்றார் இராஜாங்க அமைச்சர்!
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.
யாழில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும் மூன்று மாவட்டங்களுக்கான கலந்துரையாடலில்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரு திட்டங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு திட்டமும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதன.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் 980 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு திட்டம் குறித்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் 170 ஏக்கர் நிலப் பரப்பில் மற்றொரு திட்டம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறை கடற்கரைப் பூங்கா மற்றும் காங்கேசன்துறை விசேட முதலீட்டு வலயம் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.