சஜித்தின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள் – அரசுக்கு அறிவித்த எரான்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு SJB நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் (14) தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததையடுத்து எம்.பி அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் இவ்வாறான கொடூரமான செயல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குப் பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும்’’ என்கிறார் எரான் விக்கிரமரத்ன.