வாழும் போது வாழ்த்தியவன் , மௌனமானான் : நேத்தாஜி
போல் சத்தியனேசனே
வரலாறும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறது……
தமிழர் வரலாறும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறது….
ஒரு போர்க்காலத்தின் உதவிக் கரத்தை…
கைகள் அசைத்தபடி யாம் வழியனுப்பி வைக்கிறோம்…..
ஏதிலிகளாய் எம்மவர் இங்கிலாந்து – ஏக
போகங்களுக்கு அல்ல….
சுகபோகங்களுக்கு அல்ல…
உசிருக்காய்… அடைக்கலத்திற்காய்
வருகிறார்கள் …
என்று….மக்களுக்காய்
எம் தமிழ் மக்களுக்காய் உதவி புரிந்த…
ஒரு உன்னத மனிதனே… உன்னை
வழியனுப்பி வைக்கிறோம்….
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை
நேசித்த … ஓர் அகிம்சை வீரன்
அசைவற்றுக் கிடக்கும்போது…
கையசைத்துக் கண்ணீர் மல்கிக்
கரைகிறோம்….
வாழ்வு மாறலாம்…. தேசம் மாறலாம்
ஏன் தேகமும் மாறலாம்….
ஆனால்… ஒருவன் செய்த…
சேவைகளின் வரலாறு மாறுமோ..
ஊர் மாறியும்.. வேர்மாறாப்
பார் புகழ் கொண்ட
போலே! சத்தியனேசனே
தமிழர் அகிம்சை வேரே…
செம்மண்ணாம் உரும்பராய்…
தந்த … மக்களின்
சிவப்புக் கண்களே…
எம்மனத்தைக் கனமாக்கி
விடைகொடுக்கிறோம்…..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்
வரலாற்றில் …..
ஊறிய உத்தமனே….ஓர்
செயற்பாட்டாளனே…
எங்கள் ….
வீரமக்களின் கல்லறைகளோடு…
இணையப்போகும்…
வீரமறவனே….
புனிதமான போல் சத்தியனேசன் அண்ணாவே….
தோழனே…
உனக்கு விடைகொடுக்கிறோம்…
சென்று வா வீரனே!
கன்று கதறியளத்
தாய்ப்பசு கண்ணீர் சிந்துவதுபோல்
ஈஸ்ட்காம் தமிழர் மனமுருக…
நியூகாம் கவுன்சில் கொடி…
அரைக்கம்பத்தில் அசைய….
காற்றுவிசைக் காற்றாடிகள் நிற்க…
தமிழர் சேவைக்காய்த் தனை
அர்ப்பணித்த…. ஓர்
உன்னத ஆன்மாவின்…
உணர்வை … உணர்வால் அனுப்பி வைக்கிறோம்….
கண்ணீர் கரைபுரள….
பூக்கள் வாட….
உம்மை நிரப்பும் தேடலோடு
விடைகொடுக்கிறோம்….!!!
நேத்தாஜி
13-7-24
Announcing the passing
மரண அறிவித்தல் – போல் சத்தியநேசன்
மரண அறிவித்தல் / உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடலாம்