இம்ரான் கானின் PTI கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ)-ஐ தடை செய்யும் திட்டத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாகாண சட்டசபைகளில் ஒதுக்கப்பட்ட இடங்களின் ஒரு பகுதிக்கு தகுதியுள்ளதாக அறிவித்ததன் மூலம் PTI க்கு ஒரு பெரிய சட்ட வெற்றியை உச்ச நீதிமன்றம் வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
கடந்த ஆண்டு வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியமை மற்றும் இரகசிய தகவல்களை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் காரணமாக பிடிஐ கட்சியைத் தடை செய்ய வழக்குத் தாக்கல் செய்யப்படும் என அரசாங்க தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். எனினும், இந்த முடிவை அறிவித்ததையடுத்து, பிடிஐ கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.