வேலைநிறுத்த நேரத்தில் சேவை செய்த அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா விசேட கொடுப்பனவு.

அண்மைய வேலை நிறுத்த காலத்தில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவாக ஒரு முறை உதவித்தொகையாக 10,000 ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ்வாறான பாராட்டுக்கள் மூலம் எதிர்காலத்தில் நாட்டை முடக்கும் வேலைநிறுத்தங்களை தவிர்க்க முடியும் எனவும், அடுத்த வேலை நிறுத்தங்களில் 10’000 அல்லது அதற்கு மேற்பட்ட கொடுப்பனவு போராட்டத்தை செயலிழக்க வைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.