6 ஆண்டுகளில் தமிழகத்தில் 244 குண்டர்கள் கொலை.
கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 244 குண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல குண்டர் குழுக்கள் நேரடியாக மோதிக்கொள்கின்றனர். அப்போது பழிக்குப் பழி என சிலர் கொல்லப்படுகிறார்கள்.
குடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் கொலைகள் நடக்கின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை வெகுவாக குறைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், குற்ற எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளில் மிக அதிகமானோர் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பொது வெளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, திமுக ஆட்சியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிமுக சாடியுள்ளது.
கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இதுகுறித்த தகவல்களை அக்கட்சி நிர்வாகிகள் விரிவாக எடுத்துக்கூறுகின்றனர்.