‘ஒசெம்பிக்’ கருத்தடை மாத்திரைகள் எடுத்தும் எதிர்பாராக் கருத்தரிப்பை ஏற்படுத்தக்கூடியவையா?

கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டாலும் எதிர்பாராக் கருத்தரிப்பை நீரிழிவுநோய் மருந்தான ‘ஒசெக்பிக்’ (செமாகுலுடைட்) ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் பரிந்துரைக் கடிதம் இருந்தால் மட்டுமே இந்த மருந்தை வாங்க முடியும்.

டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

இந்த மருந்தை வாரத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

‘ஒசெக்பிக்’ மருந்து 2017ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

எடை குறைக்க இந்த மருந்து உதவுவதாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதே மருந்தை ‘விகோவி’ என்று பெயரிட்டு நோவோ நோர்டிஸ்க் அதை 2021ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்து வருகிறது. ஆனால் ‘ஒசெம்பிக்’கைக் காட்டிலும் கூடுதல் அளவு மருந்து உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

68 வாரங்களுக்கு ‘விகோவி’ மருந்தை உட்கொண்டவர்களில் 83 விழுக்காட்டினர் 5 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமான உடல் எடை குறைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

48 விழுக்காட்டினர் 15 விழுக்காட்டுக்கும் அதிகமான உடல் எடை குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

‘விகோவி’ மருந்துக்கான தேவை அதிகரித்ததால் உலகளாவிய நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, அதற்குப் பதிலாக ‘ஒசெம்பிக்’ மருந்தைப் பலர் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த மருந்து காரணமாக கர்ப்பமாகி இருப்பதாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்தடை மாத்திரை உட்கொண்டு வந்த பெண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட பெண்களும் கர்ப்பமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.