மீண்டும் ஆசிரியர் போராட்டம்.. தொடர்ந்து இரண்டு வாரங்கள்..

எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் இரண்டு வார கால தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் அரசாங்கம் இதுவரையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காததேயாகும்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான தீர்வுகளை அரசாங்கம் வழங்காவிடின், அந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.