இந்தியாவில் 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய சிங்கப்பூரின் Temasek திட்டம்.
சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான துமாசிக் இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.
அடுத்த மூவாண்டுகளில் அந்தத் தொகை முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதித்துறை, சுகாதாரப் பராமரிப்புத் துறை போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் என்று துமாசிக் நிறுவனத்தின் இந்திய முதலீடுகளுக்கான நிர்வாக இயக்குநர் மோஹித் பண்டாரி (Mohit Bhandari) சொன்னார்.
தற்போது துமாசிக்கின் உலகளாவிய முதலீடுகளில் 7 விழுக்காடு இந்தியாவில் செய்யப்படுகின்றன.
நிறுவனம் நீண்டகாலத்தில் முதலீடுகளை அதிகரிக்க எண்ணுவதாகத் பண்டாரி கூறினார்.
இந்தியாவின் பொருளியல் விரைவாக வளரும் நிலையில் அதன் பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகளும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
சீனாவில் நிறுவனத்தின் முதலீடு 19 விழுக்காடாக உள்ளது.
அரசியல், வர்த்தகப் பதற்றம் காரணமாக அங்கு துமாசிக் இனி கூடுதல் கவனத்துடன் முதலீடு செய்யும். இந்நிலையில் இந்தியா மீது கவனம் திரும்புவதாகத் பண்டாரி சொன்னார்.