வைத்தியர் அர்ச்ஜூனாவை சாவகச்சேரி வைத்தியசாலை விடுதியை விட்டு வெளியேறுமாறு GMOA அறிவிப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்ஜூனாவை இன்று (17) காலை 8 மணிக்கு முன்னதாக , சாவகச்சேரி வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர் (GMOA) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்ஜூனா விடுதியை விட்டு வெளியேற மறுத்தால் , இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.