வாசுதேவ நாணயக்கார கட்சியின் புதிய தலைவராக நிரோஷன் பிரேமரத்ன.

வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ‘ஜனநாயக இடதுசாரி முன்னணி’யின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார புதிய தலைவராக நிரோஷன் பிரேமரத்னவுக்கு பதவி வழங்கினார்.
நிரோஷன் பிரேமரத்ன இதற்கு முன்னர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பிரவேசித்திருந்தார்.
கட்சியின் தலைமைத்துவத்தை இளைஞர் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை அபேகம சபையில் நேற்று (16) நடைபெற்ற கட்சி மாநாட்டில் நிரோஷன் பிரேமரத்ன ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
எங்களிடம் கட்சி உள்ளது ஆனால் மக்கள் இல்லை என வாசுதேவ நாணயக்கார இங்கு கூறினார்.