கோபாலமூர்த்தி ரஜீவ், சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் : சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரி கோபாலமூர்த்தி ரஜீவ், வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சரின் விஜயத்தின் போது, சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும் Dr.அசேல குணவர்த்தன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிந்திய இணைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையின்
பதில் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ்
– யாழ். வந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுகாதார அமைச்சர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது கடமையில் உள்ளவரே (வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ்) என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தற்போது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில், விடுமுறையில் இருந்து வந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தானே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவா? கோபாலமூர்த்தி ரஜீவ்வா? என்ற சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.