வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன். சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் மகிபால, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.