கிணற்றில் இருந்து நான்கு வயது சிறுமியின் சடலம் மீட்பு!

கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்தே மேற்படி சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் நேற்று (17) வழங்கிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த கிணற்றுக்கு அருகில் சிறுமியின் தாய் பேச முடியாத நிலையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ருவன்வெல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.