காத்தான்குடியில் வெடித்த கைக்குண்டு.
மட்டக்களப்பு, காத்தான்குடி பூனச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றின் கூரை மீது 16ஆம் திகதி பிற்பகல் நடந்த தாக்குதல், வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிகுண்டு வெடித்ததில் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதுடன், தாக்குதல் இடம்பெற்ற போது தாயும் மூன்று பிள்ளைகளும் வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டு வெடித்ததில் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கூரையை நோக்கி கைக்குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சரியான காரணத்தை கூற முடியாது எனவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைக்குண்டு வெடித்த போது தந்தை மீன்பிடிக்கச் சென்றிருந்ததாகவும், கைக்குண்டை வீசிய நபரை கைது செய்ய பாதுகாப்பு கமெராக்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை மிக விரைவாக கைது செய்ய முடியும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.