ரணில் நாட்டைக் காப்பாற்றவில்லை.. நாட்டை காப்பாற்றப் போவது எமது திசைகாட்டி அரசுதான் : டில்வின் சில்வா.
நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சித்த போதிலும் அது உண்மையல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது 84 பில்லியன் டொலர்களாக இருந்த கடன் தொகை 100 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டமும் கொள்கையும் தமது கட்சிக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
‘ரணில் விக்கிரமசிங்க வந்து கடனை செலுத்தாமல், கடனை செலுத்தாமல் கிடைத்த சாதகமாகன விடயத்தை வைத்து, நாட்டை மீட்டெடுத்த தலைவர் என தன்னை பாராட்டிக் கொள்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது, இலங்கையின் மொத்த பொதுக் கடன் 83 முதல் 84 பில்லியன் டொலர்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்த பொதுக் கடன் 100.2 பில்லியன் டாலர்கள் என்று மத்திய வங்கி அறிக்கைகள் கூறுகின்றன. எங்கள் மக்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டது. 1 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு வரம்பற்ற வரி விதிக்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களை நெருக்கித்தான் இந்த நிலை உருவானது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்கவில்லை’ என்றார் அவர்.