ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுப்பு.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் DIG (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை கட்டாய விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த 1 ஆம் திகதி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்தது.
நிலந்த ஜயவர்தன தற்போது பதவியில் இருப்பதால் ஒழுக்காற்று விசாரணைக்கு சாட்சியமளிக்க வரும் சாட்சிகள் பாதிக்கப்படலாம் மற்றும் ஒழுக்காற்று விசாரணைக்கு பாதகம் ஏற்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு நேற்று (18) கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.