அனுரா ஜப்பான் செல்கிறார் : அவரது 24 மணி நேர நேரடி ஒளிபரப்பு 100Kயை தாண்டியது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க ஜப்பானுக்கான விஜயத்திற்காக நேற்று (18) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்புத் தொடரின் ஜப்பான் மக்கள் சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 2.00 மணிக்கு ஜப்பானின் Tsukuba இல் உள்ள Yatabe Citizen மண்டபத்தில் அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு உரையாற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அடுத்து திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள வர்த்தகர்களின் சந்திப்பும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஜப்பானில் பல உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராவின் யூடியூப் சேனல் ஒரு லட்சத்தை (100K) கடந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் பெயரில் இயங்கி வரும் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை (100k) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுர திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘ஆயிரத்தொரு யூடியூப் சேனல்களுக்கு மத்தியில், நூறாயிரக்கணக்கான ஜனி ஜனயா தேசிய மறுமலர்ச்சிக்கான அரசியலின் திசையுடன் தங்களை இணைத்துக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் உணர்வுபூர்வமான பங்களிப்பைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் உற்சாகமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எங்களுடன் கைகோருங்கள்! ஒன்றாக இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்!!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் AKD LIVE 24 என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை அனுரகுமார திஸாநாயக்க ஆரம்பித்திருந்தார், இலங்கை அரசியல்வாதி ஒருவர் இவ்வாறான YouTube நேரடி ஒளிபரப்பை ஆரம்பித்தது இதுவே முதல் முறை.