பாதாள உலகத்தை தோற்கடிக்க இராணுவம்.
அம்பலாங்கொடை மற்றும் அதுருகிரியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக இன்னும் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மறைந்திருக்கும் இடங்களை தொடர்ந்து தேடிவருவதாக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தெரிவித்தனர்.
அதற்காக ஆயுதப்படையினரின் ஆதரவும் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.