நாடாளுமன்றத்தைக் கலைக்க வர்த்தமானி தயார்..
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் கருத்துப்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு வர்த்தமானி தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வது ஜனாதிபதிக்கு சவாலாக உள்ளதால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்கும் வகையில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் வரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தற்போதுள்ள அரசியலை வேறு திசையில் மாற்றும் நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை கருத்திற்கொண்டு , 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.