உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் 4 பயணிகள் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில், சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் வந்துகொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இதில், 10 முதல் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. இதில் நான்கு ஏசி பெட்டிகளும் அடங்கும். இதனால், பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டனர்.

இதனையடுத்து, பயணிகளை மீட்க சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் விரைந்தனர். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 பயணிகள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.