கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் வருகை தந்த இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலரும் இந்த நடைபவனியில் கலந்துகொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடைபவனியில் கலந்து கொண்டவர்களுக்குக் கொழும்புத்துறை சனசமூக நிலையத்தினரால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.
இப் பாடசாலையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.