காவல்துறை அதிகாரியைத் தாக்கிய நபர் சுட்டுக்கொலை.
பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் கத்தியால் காவல்துறை அதிகாரியைத் தாக்கிய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
அது பயங்கரவாதச் சம்பவம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்துக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறப்பட்டது.
பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
அதற்குத் தயாராகும் வேளையில் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கிறது.
காவல்துறை அதிகாரிக்குக் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்டது. அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டது.