TEA தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் காலமானார்

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான TEA என அழைக்கப்பட்ட (Tamil Eelam Army) தமிழீழ இராணுவத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தமிழீழ இராணுவம் இலங்கையில் தமிழ் போராளிக் குழுவாக செயல்பட்டது. இது பனாகொட மகேஸ்வரனால் நிறுவப்பட்டது.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

02.08.1984 ல் சென்னை விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 33 பேர் கொல்லப்பட்டார்கள். 27 பேர் காயம் அடைந்தார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கள பயணிகளாயினும், தமிழகத்தில் நடந்த முதல் பெரிய வெடிகுண்டு சம்பவம் என்பதால் இது மக்கள் மத்தியில் கடும் அதிர்வை எற்படுத்தியிருந்தது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான “தமிழீழ தேசிய இராணுவம்” (TEA) ஆகும். இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து ஒரு வாரத்தில் வெடிகுண்டு சம்பவத்தின் சூத்திரதாரியான தம்பாபிள்ளை மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடித்தமையால் ,  இலங்கை விமானத்தில் ஏற வந்த சிங்கள பயணிகளும் கொல்லப்பட்டனர்.

சென்னையில் அவர் கைது செய்யப்பட்டு  மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கு விசாரிக்கப்பட்டது.

வழக்கில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

இறுதியாக அவர் 13 வருட சிறைவாசத்திற்கு பின்பு 2010-ம் ஆண்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

லண்டனில் படித்தக் கொண்டிருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு,  அவரது லண்டன் வாழ்வை உதறிவிட்டு வந்தவர். பனாகொடை வெலிக்கடை சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.

வெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.

அரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்
25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் :

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் இணைந்திருந்தார்.

பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார்.

ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர்:

இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட்பட பல போராளிகள் கொல்லப்பட்டனர்:

அச்சம்வத்தின் பின்னர் டக்ளஸ்தேவனாந்தா பரந்தன் ராஜன் பனாங்கொட மகேஸ்வரன் போன்ற போரளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர் , பின்னாளில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் பொழுது வாவி வழியாக ஒரு படகில் காளி சுப்பிரமணியம் ஆகிய தமிழீழ இராணுவ போராளிகளுடன் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

ஈழ விடுதலை இயக்கங்கள் இயக்க செயற்பாட்டுக்காக நிதியை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வேளை தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் 1984இல் மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியை கொள்ளை இட்டார். கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்.

இதே வேளை தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும் “ஏர் லங்கா”விமானத்தில் ஒரு குண்டை வைத்து கைதானார்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு : செப்டம்பர் 23. 1983

83 ஜூலைக் கலவரத்தின் பின்னர் நடைபெற்ற மற்றொரு முக்கியமான சம்பவம் மட்டக்களப்பு சிறையடைப்பாகும்.

வெலிக்கடை சிறைப் படுகொலைக்கு பின்னர் முக்கியமான தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப் பட்டிருந்தனர்.

60 க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு தடுத்து வைகப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் வாவி சூழ்ந்த பகுதியான ஆணைப்பந்தி என்னுமிடத்தில் சிறைச்சாலை அமைந்திருந்தது.

சிறையை உடைத்து போராளிகளை மீட்க வேண்டும் என்று திட்டமிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தலைவர்களின் ஒருவராகவும், மக்கள் விடுதலை படை தளபதியாகவும் அப்போதிருந்த டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு பிராந்திய தலைவராக இருந்த சிவா, மத்திய குழு உறுப்பினராக இருந்த மணி, மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுபினர்களான குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 15 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்.

மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் கால்மாக்ஸ் நூற்றாண்டு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு கருத்தரங்கம் நடத்தியது.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இரண்டு விரிவுரையாளர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அழைத்தது.

அதில் ஒருவர் வரதராஜப்பெருமாள், இன்னொருவர் மகேஸ்வரராஜா.

கருத்தரங்கில் கலந்து கொள்ள முதலில் வரதன் மறுத்தார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பதால் கிடைக்கும் வருமானத்தை இழக்க முடியாது. ஏற்கனவே பட்ட அனுபவங்கள் போதும் என்று கூறினார்.

ரமேஷ், தயாபரன் ஆகியோர் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கருத்தரங்கில் பொலிஸ் நுழைந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களோடு சேர்த்து இரண்டு விரிவுரையாளர்களையும் கைது செய்தது.

அவர்களும் மட்டக்களப்பு சிறையில் தான் இருந்தனர்.

அச்சமயத்தில் பத்மநாபாவும் கருத்தரங்கில் இருந்த போதும் அவர் தப்பிவிட்டார்.

எப்போது விடுதலை ?

புளொட் அமைப்பில் மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜா, வாமதேவன், பாரூக், டேவிட் ஐயா ஆகியோரும், ‘தமிழீழ விடுதலை இராணுவம்’ என்றும் அமைப்பைச் சேர்ந்த பனாகொடை மகேஸ்வரனும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த சிலரும், மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.

இவர்களில் பலரை தானாகவே முன்வந்து அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை.

சிறை உடைப்பு திட்டத்தை இவர்கள் அனைவரும் முன்னின்று வரவேற்றதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.

சிறை உடைப்பு நடவடிக்கையை வெளியில் இருந்து மேற்கொள்ளும் பொறுப்பு குணசேகரனிடமும், சிறையின் உள்ளே டக்லஸ் தேவானந்தா விடமும் ஒப்படைக்கப்பட்டது.

பல இயக்க போராளிகள் சிறையை உடைத்து தப்பும் போது , சிறையை அண்மித்திருந்த வாவி வழியாக படகொன்றின் மூலம் 3போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.

வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

இப்படியான போராட்ட பின்னணியை கொண்டரே பனாகொட மகேஸ்வரன் என அழைக்கப்பட்ட   தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்.

 

Leave A Reply

Your email address will not be published.