போலீஸ் யூனிஃபார்ம் என்றால் அலர்ஜி – சீருடையில் இருந்த தலைமை காவலரை கட்டையால் தாக்கிய நபர்!

சீருடையில் இருந்த தலைமை காவலரை ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூனிஃபார்ம் அலர்ஜி?
ஆந்திரா, கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் தாஸ். இவரும், அவருடன் பணிபுரியும் காவலர் ஒருவரும் சேர்ந்து சாதுபேட்டை பகுதிக்கு வழக்கு ஒன்றின் விசாரணை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது ஹோட்டலில் பைக்கை நிறுத்தி, தாஸ் ஹோட்டலுக்குள் சென்றுள்ளார். திடீரென அங்கிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர் கலிந்திலோ என்பவர், ஒரு விறகு கட்டையை எடுத்து காவலர் தாஸ் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறி விழுந்த தாஸை மேலும் அந்த நபர் கட்டையால் தாக்கியுள்ளார். உடனே, சக காவலர் கலிந்திலோவை பிடித்து கட்டையை பறித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து நடத்திய விசாரணையில்,
கலிந்திலோவுக்கு போலீஸ் சீருடை பிடிக்காது என்றும், போலீஸ் சீருடையில் யாராவது வந்தால் அவர்களை சரமாரியாக தாக்குவார் என்பது தெரியவந்தது. தற்போது, தாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கலிந்திலோவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். தொடர்ந்து, அவருக்கு இதுபோன்ற குறை இருக்கிறதா அல்லது நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.