பொய்யான கணக்குகளைத் தடைசெய்யும் சமூக ஊடகத் தளங்கள்
சமூக ஊடகத் தளங்கள் சில, சிங்கப்பூர் அரசாங்கம் அடையாளங்கண்டுள்ள பொய்யான கணக்குகளைக் கண்டுபிடித்து அவற்றை தடைசெய்யத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டுக் கட்டமைப்பைச் சேர்ந்த 95 சமூக ஊடகக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக நேற்று முன்தினம் (19 ஜூலை) உள்துறை அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் ஆலோசனைக்கு TikTok கட்டுப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனையை ஆய்வு செய்து, உள்ளூர் சட்டங்களை மீறும் ஊடகங்களை அகற்றுவதாக YouTube கூறியது.
ஊடகங்களை அகற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் வெவ்வேறு கோரிக்கைகள் இருப்பதாக YouTube சொன்னது.