ஏமன் செங்கடல் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஏமனில் ஹௌதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா (Hodeidah) நகரின் செங்கடல் துறைமுகத்தை இஸ்ரேலிய ராணுவம் தாக்கியுள்ளது.
அதில் மூவர் மாண்டனர்.
80க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்று ஹௌதிக் குழு தெரிவித்தது.
ஹொடைடா துறைமுக நகரில் உள்ள எண்ணெய், எரிசக்தி ஆலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஆகாயத் தாக்குதலை நடத்தியது.
ஹௌதிக் குழு இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவைத் தாக்கியதை அடுத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஏமனில் உள்ள ஹௌதிக் கிளர்ச்சிக் குழுமீது இஸ்ரேல் நேரடித் தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறை.
கிளர்ச்சிக் குழுவின் நூற்றுக்கணக்கான தாக்குதலுக்கு அண்மைய தாக்குதல் ஒரு பதிலடி என்று இஸ்ரேல் தற்காப்பு அமைச்சு சொன்னது.
இஸ்ரேலின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த ஹௌதித் தரப்பு, பதிலடி கொடுக்கப்போவதாகச் சொன்னது.