கல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.
டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கல்கட்டா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கோல்கட்டா அணி, ஸ்ரேயாசின் டில்லியை சந்தித்தது.
நாணய சுழற்சியில் வென்ற கல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்த அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் இஷாந்த் சர்மா, அக்சர் படேலுக்குப் பதில் காயத்தில் இருந்து மீண்ட சுழல் வீரர் அஷ்வின், ஹர்ஷல் படேல் இடம் பிடித்தனர்
டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தவான் (26), வருண் சுழல் வலையில் சிக்கினார். பிரித்வி 41 பந்தில் 66 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் 14வது அரைசதம் எட்டினார். டில்லி ஸ்கோர் 17.4 ஓவரில் 200 ரன்களை கடந்தது. ஸ்டொய்னிஸ் (1) ஏமாற்றினார்.
டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் (88), ஹெட்மயர் (7) அவுட்டாகாமல் இருந்தனர். கல்கட்டா சார்பில் ரசல் 2, நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய கல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் மட்டும் எடுத்து, 18 ரன்னில் வீழ்ந்தது. ராணா (58), மோர்கன் (44) ஓட்டங்களை பெற்றனர்.