உலகெங்கும் இணையச் சேவைத் தடங்கல்…எதனால் நேர்ந்தது?
உலகெங்கும் நேற்று (19 ஜூலை) இணையச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்குக் காரணம், CrowdStrike நிறுவனத்தின் புதிய பதிப்பைச் சரிபார்க்கும் நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படாதது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையப் பாதுகாப்பு மென்பொருளை நிறுவனம் வழக்கமாகப் புதுப்பிக்கும் நடவடிக்கை அது.
CrowdStrike நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Falcon Sensor மென்பொருளில் இணைய ஊடுருவலுக்கு எதிரான வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகம் முழுவதும் Microsoft’s Windows இயங்குதளத்தைப் பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் தடைபட்டன.
அண்மை காலத்தில் ஆகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் தொழில்நுட்பச் சேவைத் தடங்கலாக அது கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள வங்கிகள், விமானச் சேவைகள், மருத்துவமனைகள், அரசாங்க அலுவலங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டன.
தடங்கலைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு நேரம் எடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரிய அளவில் தடங்கலைத் தவிர்க்க மென்பொருளின் புதிய பதிப்பு சிறிய அளவில் முதலில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை தந்தனர்.