ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் அகதிகள் குழு

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் அகதிகள் குழு பாரிஸ் சென்றடைந்துள்ளது.

12 வெவ்வேறு நாடுகளில் வாழும் விளையாட்டு வீரர்கள் தங்கள் குழு உறுப்பினர்களை முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர்.

எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை.

என்றாலும் உலக மேடையில் தடம்பதிக்க அந்த 37 விளையாட்டாளர்களும் தயாராக உள்ளனர்.

12 விளையாட்டுகளில் திறனை வெளிப்படுத்த அவர்கள் ஆவாலாய் இருக்கின்றனர்.

தலைநகருக்குச் செல்வதற்கு முன் நார்மண்டியில் (Normandy) அவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

இவ்வாண்டின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் அகதிகள் குழு இதுவரை இல்லாத அளவில் பெரியது.

தொடர்ந்து மூன்றாவது முறையாகக் குழு போட்டிகளில் கலந்துகொள்கிறது.

ஒலிம்பிக் அகதிகள் அறநிதி அமைப்பு குழுவை நிர்வகிக்கிறது.

எந்த நாட்டையும் பிரதிநிதிக்காவிட்டாலும் உலகின் ஆகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது அமைப்பு.

Leave A Reply

Your email address will not be published.