ஆறு மாதங்களில் கடன் தொகையை விட ரூ. 129 பில்லியன் கடனை அரசாங்கம் செலுத்த முடிந்தது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பத்திரங்கள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்பட்ட கடனை விட 129 பில்லியன் ரூபா கடனை அரசாங்கம் செலுத்த முடிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் பத்திரங்கள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மூலம் பெற்ற மொத்த கடன் தொகை 4852 பில்லியன் ரூபாவாகும்.
இதன்போது செலுத்தப்பட்டுள்ள கடன் தொகையின் பெறுமதி 4981 பில்லியன் ரூபா என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பான புள்ளி விபரங்களை மாத்திரமே கேட்பதாகவும், அரசாங்கம் கடனை முறையாக செலுத்துவதாகவும் திரு சேமசிங்க வலியுறுத்துகிறார்.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், மத்திய வங்கிக்குத் தேவையான பணத்தை அச்சடிக்கும் வசதி அரசாங்கத்திடம் இருந்ததாகவும், அதன் விளைவாக 70% வரையிலான பணவீக்க வீதத்தை நோக்கி நாடு நகர்ந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் புதிய மத்திய வங்கிச் சட்டத்தை நிறைவேற்றி சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதால் அரசாங்கமும் சாதாரண வியாபாரம் செய்வது போன்று கடன் பெற்று கடன்களை செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.