பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழை நோக்கிய பயணம் எனும் செயற்திட்டம்.
விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் பிளாஸ்டிக் கழிவுகள்
அற்ற யாழை நோக்கிய பயணம் எனும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக இன்றைய தினம் சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் உரியமுறையில் சேகரக்கப்கபட்டு அகற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக இங்கு குருவிக்காட்டில் கிடைக்காத கழிவுகள் இல்லை.
அனைத்து வகையான கழிவுகளும் அள்ள அள்ள வந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படுத்தும் பம்பஸ் (Diapers) அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், கண்ணாடி போத்தில்கள், துணிகள், சிகை அலங்கார நிலையங்களின் கழிவுகள் என கழிவுகளின் உறைவிடமாக மாறிக்கொண்டிருக்கின்றது பறவைகளின் சரணாலயம்.
இச்செயற்திட்டத்தில்
சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை ஊழியர்கள், கிராம சேவையாளர்,சுகாதார பரிசோதகர்
பிரதேச சபை உறுப்பினர்கள்,
,சமூர்த்திஉத்தியோகத்தர்,ஊர் மக்கள் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.