யாழ் பயணிகள் படகில் பிறந்த “கடல் இளவரசன்”
நேற்று (20) யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவில் இருந்து குறிக்கட்டுவான் ஜெட்டிக்கு வந்து கொண்டிருந்த படகில் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
யாழ் வைத்தியசாலையில் குழந்தையும் தாயும் நலமுடன்…
பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் குறித்த பெண் தனது கணவருடன் குறிக்கட்டுவானுக்கு படகில் வந்து கொண்டிருந்த போதே படகில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து படகு நடத்துனர் உடனடியாக டெல்ஃப்ட் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மருத்துவருடன் ஆம்புலன்ஸ் படகு ஒன்று வந்து கொண்டிருக்கும் போதே படகில் பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
படகில் இருந்த வயோதிபப் பெண்கள் குழுவொன்று அவரை துணியால் சூழ்ந்து கொண்டு மருத்துவச்சி சேவைகளை வழங்கி குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளனர்.
வைத்தியரோடு நடுக்கடலை வந்தடைந்த , பெண்ணையும், குழந்தையையும் படகில் ஏற்றிக்கொண்டு, குறிக்கட்டுவான் ஜெட்டி ஊடாக அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி, இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையும் தாயும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுக்கடலில் குழந்தை பிறந்ததால், பெற்றோர் அக்குழந்தைக்கு கடல் குமரன் (கடல் இளவரசன்) என பெயரிட முடிவு செய்துள்ளனர்.