கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா.
கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொடை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த 39 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்புகையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைமூலமே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் 15 பேர் , அவர் தொழில் புரிந்த இடத்திலுள்ள 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை, எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சமுகத்தில் இருந்து தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.