அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார்!
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அதன்படி அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஜனாதிபதி விவாதத்திற்குப் பிறகு, வேட்புமனுவில் இருந்து ராஜினாமா செய்யும்படி பிடனுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக அழுத்தம் கொடுத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிபராக பதவியேற்றது தான் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என கூறியுள்ளார்.
மேலும், அதில் அவர் கூறியிருப்பதாவது, “மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது எண்ணம், ஆனால் எனது கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி நான் பதவி விலகி, ஜனாதிபதியாக எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.