மீண்டும் மருந்து தட்டுப்பாடு உருவாகலாம்?

மருத்துவ விநியோகத் துறையில் பொதுக் கொள்வனவு நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்துவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அமைப்பில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்திற்குள் மீண்டும் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கைக்கு பல கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மருந்துகளாலும், கொள்வனவு முறைகளை மீறியதாலும் வைத்தியசாலைகளில் பல பிரச்சினைகள் உருவாகின.
மருத்துவ விநியோகத் துறையில் பொதுக் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தனது சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.