கோர்ட்டில் கிளப் வசந்த கொலை தொடர்பான ரகசியம் ஒன்றை சொல்ல அனுமதி கேட்ட துலான் சஞ்சய்!
சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த கொல்லப்பட்ட அத்துருகிரி பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை பகல் இடைவேளையின் பின்னர் இன்று வழங்க முடியும் என குறித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த கொலையின் பின்னர் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.