ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட உள்ளது
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26)க்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) அல்லது வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ளது.
அந்த சந்திப்பின் பின்னர் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்து இன்றுடன் (22) 05 நாட்கள் நிறைவடைந்துள்ளன.