குழந்தைகளிடையே காய்ச்சல் மற்றும் நிமோனியா அதிகரித்து வருகிறது
சிறுவர்களிடம் இளைப்பு மற்றும் நிமோனியாவின் தாக்கம் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மழை மற்றும் காலநிலை காரணமாக , மேல் சுவாசக்குழாய் வைரஸ் காய்ச்சல் அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் , இரவில் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், தேவையான சிகிச்சையை உடனடியாக பெறுமாறுஅவர் அறிவுறுத்தியுள்ளார்.