அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் பிடன்.. எளிதான வெற்றிக்கான அறிகுறிகள் ட்ரம்புக்கு
அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை நியமிப்பதாகவும் அவர் கூறினார்.
கட்சியின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவரது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலக வேண்டும் என கட்சி தொடர்ந்து கேட்டுக் கொண்டது.
அக்கட்சியின் புதிய அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதோடு, எதிரணி போட்டி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார்.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார் என அதிகமான கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.