இணையச் சேவைத் தடங்கல் – பெரும்பாலான கணினிகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்ட 8.5 மில்லியன் Microsoft கணினிகளில்
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவை மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாய் CrowdStrike இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பக் கோளாற்றால் குழப்பம் ஏற்பட்டதை Microsoft ஒப்புக்கொண்டது.
அது இணைய வரலாற்றில் நடந்துள்ள மிக மோசமான பாதிப்பு.
தொழில்நுட்பத் தடங்கல் எற்பட்டதால் பல்லாயிரம் விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. வங்கிச் சேவைகளிலும் முடக்கம் ஏற்பட்டது.
தொழில்நுட்பச் சேவை முடக்கத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருப்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.