ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் போக்குவரத்து அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாரால் களனி பள்ளத்தாக்கு கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா பெதுரு தேயிலை தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் (30) அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலவந்தமாக நுழைந்தனர். இந்த உத்தரவை, தோட்ட நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி பாலித சுஹாசிங்க தெரிவித்தார்.

30.05.2024 அன்று, களனிவெளி தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நுவரெலியா பீற்று தேயிலை தொழிற்சாலைக்குள் அமைச்சர் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலவந்தமாக நுழைந்து குற்றவியல் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக , நுவரெலியா பொலிசார் நீதிமன்றத்துக்கு முன்னரே அறிவித்திருந்தனர். .

Leave A Reply

Your email address will not be published.