தொடர்புத்திறன் குறைபாட்டுடன் எப்படி இவ்வளவு தூரம் வந்தேன் என தெரியவில்லை” – சரிகமப புகழ் அருளினி (Video)
மலேசியாவைச் சேர்ந்த 22 வயதுப் பாடகி அருளினி அஷ்வினா ஆறுமுகம். குறுகிய காலத்தில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை என்று தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பிரபலமடைந்துவிட்டார்.
அதற்குக் காரணம் இசை.
இந்தியாவின் மிகப் பெரிய பாடல் போட்டிகளில் ஒன்றான Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளராக அருளினி இருக்கின்றார்.
‘Autism’ தொடர்புத் திறன்குறைபாடு இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டி வரும் திறமை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சரிகமப அனுபவம்…..
“முயற்சி செய்துபார்க்கலாம் என்றுதான் தேர்வுச் சுற்றுக்குச் சென்றேன். ஆனால் எப்படி இவ்வளவு தூரம் வந்தேன் என்று தெரியவில்லை. இது அதிசயம். ஒவ்வொரு சுற்றிலும் புதிய அனுபவம். திறமையை வளர்த்துக் கொள்ள நிறையக் கற்றுக்கொள்கிறேன்” என்றார் அருளினி.
பிடித்த பாடகர் பிரதீப் குமார், பிடித்த இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறும் அருளினி தமது மிகப் பெரிய ஆசையையும் பகிர்ந்துகொண்டார்.
“இசை, பாடல் வழி மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். முடிந்தால் தொடர்புத்திறன் குறைபாடுள்ள பிள்ளைகளுக்குத் தனியொரு மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டும்”.
பாட்டுத் துறை மட்டும் இன்றி வருங்காலத்தில் நாடகத்துறையிலும் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளார் அருளினி. முனைவர் பட்டம் பெறும் வரை படிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவுக்குச் சென்று பாட்டுப் பாட வாய்ப்புக் கிடைத்ததும் அருளினியை எப்படித் தனியாக அனுப்புவது என்று யோசித்ததாகவும் ஆனால் அங்கிருந்த தோழி தமக்கு உதவியதாகவும் திருமதி கஸ்தூரி கூறினார்.
“தொடர்புத்திறன் குறைபாடு உள்ள பிள்ளைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் முயற்சி, பயிற்சி, தொடர்ச்சி எனும் அணுகுமுறையைப் பின்பற்றினால் எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதிலிருந்து பிள்ளைகளை மீட்டுக் கொண்டுவர முடியும்” என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் அவர்.
@satheesjeyam1 #அருளினி??#நன்றி #zeetamil #மலேசியத்தமிழன்#zeetamil #சரிகமப? #chefsathees???#இறுதிவரை_பாருங்கள் ♬ son original – satheesjeyam