அமரர் சிங்கப்பூர் S. ராஜரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துச் சொல்லும் புத்தகம் ‘The Lions Roar’
சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்குப் பெரும்பங்காற்றிய மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் S. ராஜரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துச் சொல்லும் பல்லூடகப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
‘The Lions Roar’ என்ற அந்தப் புத்தகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் அமரர் S. ராஜரத்தினத்தின் பங்களிப்பை விவரிக்கிறது புத்தகம். வாசகர்கள் அதனுடன் நேரடியாக உரையாடலாம்.
அமரர் ராஜரத்தினத்தின் போதனைகள் தமக்குப் பேருதவியாய் இருந்ததாகப் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவது அமரர் ராஜரத்தினத்தைக் கௌரவிக்கும் சிறந்த வழி என்றார் அவர்.