காசா பாதுகாப்பு வலயத்தில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்.
காஸா ‘பாதுகாப்பு மண்டலம்’ மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு கான் யூனிஸ் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற கால அவகாசம் அளித்த பிறகு இஸ்ரேலிய ராணுவம் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. முன்னதாக, இந்த மண்டலம் மனிதாபிமானப் பகுதி என்று அழைக்கப்பட்டது.
பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் மற்றொரு தொடர் தாக்குதலின் ஆரம்பம் என்று சில இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். நேற்று, தெற்கு காசா பகுதியில் அல்-மவாசி மனிதாபிமான மண்டலத்தின் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு படைகள் மக்களை உத்தரவிட்டன.
மக்கள் வெளியேறுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காஸா வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். “இஸ்ரேலியப் படைகள் தங்கள் வெளியேற்ற உத்தரவு ஆவணங்களை எறிந்த சிறிது நேரத்திலேயே, அவர்கள் கிழக்கு கான் யூனிஸில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதலைத் தொடங்கினர்” என்று பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவித்தன, பல குழந்தைகள் காயமடைந்தனர்.