கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான 21 வயது யுவதியின் லேட்டஸ்ட் கதை
“இன்னமும் பஸ்சைக் காணவில்லை… கொலைக்காக திட்டமிட்ட இடத்திற்குச் யுவதி சென்று வந்துள்ளார் …”
கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய யுவதியை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க கடுவெல நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இந்த யுவதி அத்துரிகிரிய பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளப் வசந்த கொலையை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பஸ் ஒன்று இந்த பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
எனவே, இந்தப் படுகொலைச் சதியில் இந்த பெண்ணுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
“இன்னும் யுவதி கிடைக்கவில்லை. . அதனைத் தேடி வருகின்றோம்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், கிளப் வசந்தாவின் கொலையைத் திட்டமிட்டவர்களில் ஒருவராக , குறித்த யுவதி சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலைக்காக இந்த பஸ் வாங்கப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 08ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்திருந்த கிளப் வசந்தா அதே மையத்தில் வைத்து இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.