பொதுத் தேர்தலுக்கு பணமில்லை : அதிகம் துள்ளினால் , ஆறை ஐந்தாக்கி , ஐந்தை ஆறும் ஆக்குவேன்” – ஜனாதிபதி

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பணம் ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அநுர திஸாநாயக்கவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பொதுத் தேர்தல் பற்றி பேசுகின்றனர். பொதுத்தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. “ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

`ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, “அதிகம் துள்ளினால் , ஆறை ஐந்தாக்கி , ஐந்தை ஆறும் ஆக்குவேன்” என்றும் கூறியுள்ளார்.

”ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்த ரொஹான் பல்லேவத்தவின் கட்சி அங்கத்துவம் குறித்து அறிய எங்களுக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. ஆனால் ஜி.எல். பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினரை அறிய அரை மணித்தியாலமே சென்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.