இந்த நாட்டின் ஆரோக்கியத்திற்கு ஜப்பானின் உதவி!
ஆரம்ப சுகாதார சேவையை பலப்படுத்த வேண்டி 383 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 10 குளிரூட்டப்பட்ட ட்ரக்குகள் மற்றும் 21 வண்டிகள் சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
நோய்த்தடுப்பு திட்டங்களை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கம் மற்றும் Gavi CDS திட்டத்தால் UNICEF உடன் ஒருங்கிணைந்து வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
குறித்த வாகனங்களை உத்தியோகபூர்வமாக அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கும் நிகழ்வு மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த நன்கொடைகளை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideki மற்றும் இலங்கைக்கான UNICEF இன் பதில் பிரதிநிதி திருமதி பிகோனா அரேலானோ ஆகியோர் வழங்கினர்.