ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் கும்பல் இருந்தது அனுரகுமாரவுடன்தான் – ஞானசார தேரர்.
ஜனதா விமுக்தி பெரமுனவின் அனுரகுமார திஸாநாயக்க ஜப்பான் சென்று தான் ஆட்சிக்கு வந்தால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றி ஆரம்பம் முதல் இறுதி வரை விசாரணை நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதல்குறித்து அனுரகுமாரவுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை தெரியும் என்றும், மேலும் வெடிகுண்டு கும்பல் அனுரகுமாரவோடுதான் இருந்ததார்கள் என , பிணையில் (22) வெளியான ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் கும்பல் இருந்தது அனுரகுமாரவுடன்தான் – ஞானசார தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இப்படி கூறினார்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி நான் திக்வெல்ல பிரதேசத்தில் ஷேக் ஒருவரை சந்தித்தேன். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில், இந்த நாட்டில் உள்ள மதவெறிக் குழுக்கள் ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான சோதனையை நடத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளன. இதைப் போய் பாதுகாப்புச் செயலாளரிடம் சொல்லுங்கள் என்று அப்போது கூறினோம். அதன்படி அன்றைய தினம் சென்று உண்மைகளை தெரிவித்தோம். இந்த உண்மைகளைச் சொல்லியும், இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினரையும் மீறி வெடிகுண்டுகள் வெடித்தன.
தீவிரவாத முஸ்லீம் சக்திகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்திருந்தன? நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு உழைத்த ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் அதன் பின் சென்று ஒளிந்துகொண்டனர். ஜப்பானில் இருந்து அனுரகுமார நேற்று , நான் அதிகாரத்துக்கு வந்தால் தீவிரவாத வேரைக் கண்டுபிடிப்பேன் என்று கூறியதைக் கண்டேன். எல்லா வெடிகுண்டு கும்பலும் அவருடன் இருந்ததால் ஆதன் வேர்களை அவருக்கு தெரியும். அதுதான் இதன் அசிங்கமான கதை
இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடனே நான் கர்தினால் அவர்களை சந்தித்து காத்தான்குடியில் சஹாரான் என்று ஒருவன் இருக்கிறான், தாக்குதல் தொடுக்க வர உள்ளான், அவன் வாள், கத்தியுடன் நடமாடுகிறான், மக்கள் வெளியே செல்ல அங்கே அனுமதியில்லை . கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல் ஒன்று நடக்க உள்ளது என்றேன். அவர் எங்களிடம் என்ன சொன்னார் தெரியுமா? தேரரே, இந்தக் கதை எங்களுக்கும் தெரியும், இதைத் தடுக்கத்தான் பன்றிக் கூடுகள் கட்டுகிறோம் என்றார். அதுதான் அவரது பதில்.
முஸ்லிம் சமூகம் இப்போது என்ன பேசுகிறார்கள் , நாட்டில் பேசும் போது கூட இந்த வெறித்தனமான தீவிரவாதம் சில இடங்களில் இருக்கிறது என்கிறார்கள். சிறையில் அடைத்தாலும் பேச வெட்கப்படமாட்டேன் என்று பொறுப்புடன் கூறுவேன் என்றார்.