ஊதிய உயர்வு.. மசோதா நாடாளுமன்றத்தில் ..
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான திருத்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட யோசனைகளின்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 17500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
நாளாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 700 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக வரைவாளர் தயாரித்த சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.